மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் : ப.சிதம்பரம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில்…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. மக்களவையில் இருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த நிலையில், மாநிலங்களவையில் எதிர்ப்பு ஏதும் இன்றி ஏகமனதாக நிறைவேறியது.

இதனைத்தொடர்ந்த அந்த மசோதா குடியரசு தலைவர் திரௌபதி முர்மவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு குடியரசுதலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது சட்டமாக மாறியுள்ளது.

மகளிர் மசோதா சட்டமாக மாறினாலும் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகி விட்டதாக அரசு கூறியுள்ளது. இந்த மசோதா சட்டமாகி இருக்கலாம், ஆனால் பல ஆண்டுகளாக நடைமுறைக்கு வராது. 2029 மக்களவை தேர்தலுக்கு முன் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் இருக்கும் சட்டத்தால் என்ன பயன்? நீர் நிரம்பிய பாத்திரத்தில் நிலவின் ஒளி பிரதிபலிப்பது போன்ற, ஒரு மாயை தான் இந்த சட்டம். தேர்தல் நாடகத்திற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என சிதம்பரம் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.