”நான் எப்போதும் பிஸியாக இருப்பதாக பலர் சொல்வதைக் கேட்டால் சிரிப்பு வருகிறது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

நான் எப்போதும் பிஸியாக இருப்பதாக பலர் சொல்வதைக் கேட்டால் சிரிப்பு வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் எண்ணித் துணிக நிகழ்வின் 7-வது பகுதியாக…

நான் எப்போதும் பிஸியாக இருப்பதாக பலர் சொல்வதைக் கேட்டால் சிரிப்பு வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் எண்ணித் துணிக நிகழ்வின் 7-வது பகுதியாக புது தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர் என் ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:

எப்போதெல்லாம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்கிறேனோ அப்போதெல்லாம் அதிகம் படிக்கிறேன், கற்றுக் கொள்கிறேன்.உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உள்ளது. செல்வம், வளங்கள் இல்லை என்றால் யாரும் வெல்ல முடியாது தேவை என்பது உள்ளது. ஏழு தலைமுறைகளாக தொடர்ந்து பள்ளிகளை, மருத்துவமனைகளை அதிகப்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.

பிரச்னைகளை அதிகமாகி வருகின்றன. அதை துரத்தி வருகிறோம். வாழ்வில்
புரட்சிகாரமான மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு தான் உள்ளது. உங்களை நீங்கள் தான் மாற்றி கொள்ள முடியும், அரசு மாற்ற முடியாது. 140 ஆண்டுகளாக இந்த நாடு அரசால் உருவாக்கப்பட்டது அல்ல. மக்கள் சக்தியால் தான் உருவானது. 9 ஆண்டுகள் முன் வரை புது தொழில் முனைவோர் குறைவாக தான் இருந்தனர்.

இன்று சென்னை 3-ம் பெரிய புது தொழில் முனைவோர் இருக்கும் நகரம். இந்தியா இன்று வேகமாக பொருளாதார அளவில் வளர்ந்து வரும் நாடு, மக்கள் மீதுள்ள
நம்பிக்கை முக்கியம். கனவு மிக முக்கியம் தோல்வி ஏற்படும் அனைவருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. தோல்வி என்பது பாடம் தான். முத்து உருவாவது பல்வேறு சிக்கல்களுக்கு , மத்தியில் தான் எதிர்ப்புகளை தாண்டி தான். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கேள்விக்கு ஆளுநர் ஆர் என் ரவி பதில் அளித்தார். அதில், என்னை பொறுத்தவரை நான் ஒரு சமூகத்திற்கு தான் உழைக்கிறேன் அது தான் என் நாடு என்றார்.

2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். 40 % ஆன்லைன் பண பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கின்றன. கடந்த ஆண்டில் கூட தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது 15 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் டெக்னாலஜி வளர்ந்து
வருகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்தியது கோவின் செயலி மூலம் உடனே தடுப்பூசி செலுத்தியது குறுஞ்செய்தி வருகிறது.

காலநிலை மாற்ற பிரச்சினையை இந்தியா தான் சிறப்பாக கையாண்டு வருகிறது. இந்தியா வளரும் போது இந்திய மக்களின் மதிப்பும் உயரும். Physical, intellectual, spiritual ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் மூன்று நிலைகள். நம் பெற்றோர்களை பார்த்துக் கொள்வது நம் கடமை. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வரிகள் பாதித்தவை நாம் இதுபோன்றவர்கள் தான்.

உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் சேர்ந்து ஒற்றுமையாக குடும்பமாக
நீங்கள் இருக்க வேண்டும். நானும் முயற்சிக்கிறேன் நீங்களும் முயற்சி செய்யுங்கள் என்று பேசினார்.

நான் எப்போதும் பிஸியாக இருப்பதாக பலர் சொல்வார்கள் அதைக் கேட்டால் எனக்கு
சிரிப்பு தான் வரும் என்றும் ஒரு கேள்விக்கு ஆளுநர் ஆர் என் ரவி பதிலளித்தார்.  காலையில் தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் யோகாசனம் மற்றும் பிராணாயாமம்
செய்வதால் தான் என் உடல் கட்டுக்கோப்பாக உள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது 140 கோடி மக்களுக்கும் அரசால் அனைத்தையும் செய்து விட முடியாது. இந்தியா தொடர்ந்து முன்னேறி வர உங்களை போன்ற தொழில் முனைவோர்கள் தான் காரணம்.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.