மாணவர்களின் நலனுக்காக சில திட்டங்களில் பின்வாங்குவது தவறில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் நலனுக்காக சில திட்டங்களில் பின் வாங்குவது என்பது தவறில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் தலைமை பண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர்…

மாணவர்களின் நலனுக்காக சில திட்டங்களில் பின் வாங்குவது என்பது தவறில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் தலைமை பண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர் பயிற்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தான் தலைமை ஆசிரியர்களுக்கு இது போன்று பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

 

இதற்காக ஒன்பதரை கோடி ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை அறிவித்துவிட்டு பின்னர் பின்வாங்குவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். அதற்காக சில பின்வாங்குவது என்பது தவறில்லை என்றார்.

மக்களுக்காக சமூக சேவையாக செய்யும் துறைதான் பள்ளி கல்வி துறை என்ற அவர், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே சில திட்டங்களில் பின்வாங்குவதாகவும் விளக்கமளித்தார். போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளது. போதை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு விரைவில் நனவாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.