எம்எல்ஏ இல்ல காதணி விழாவில் 1,200 கிலோ கறி விருந்து, பத்து கோடி மொய் வசூல்!

பேராவூரணியில் சட்டமன்ற உறுப்பினர் இல்ல காதணி விழாவில் 1,200 கிலோ கறி விருந்து போட்டு பத்து கோடி ரூபாய் மொய் பிடிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு…

பேராவூரணியில் சட்டமன்ற உறுப்பினர் இல்ல காதணி விழாவில் 1,200 கிலோ கறி விருந்து போட்டு பத்து கோடி ரூபாய் மொய் பிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக்குமார்
அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இன்று காதணி விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, தொகுதி முழுவதும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மொய் எழுதுவதற்கு தனியாக பந்தல் அமைத்து 18 இடங்களில் மொய் எழுதப்பட்டன.

மண்டபத்தின் அடுத்த பகுதியில் பிரம்மாண்டமான பந்தல் அமைத்து விழாவிற்கு வருபவர்களுக்கு கறி விருந்து நடைபெற்றது. மண்டபத்தின் உள்பகுதியில் சைவ விருந்து நடைபெற்றது. இந்த கறி விருந்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விருந்து உண்டு காதணிச் செல்வங்களை வாழ்த்திச் சென்றனர்.
இந்தக் காதணி விழாவில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மொய் பிடிக்கப்பட்டது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.