தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமையவுள்ள சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பிறகு இந்தியாவில் குலசேகரபட்டினத்தில் தான் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.
2ஆயிரத்து 233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
3, 4வது ராக்கெட் ஏவுதளம் அமையும் இடத்தை பார்வையிட இஸ்ரோ தலைவர் குலசேகரபட்டினம் வந்தார்.
இதுவரை 1900 ஏக்கர் நிலத்தை மாநில அரசு இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுமையாக நிலம் கையகப்படுத்திய பின் கட்டுமான பணிகள் துவங்க உள்ளது. குலசேகரபட்டினம் இயற்கையாகவே விண்ணிற்கு ராக்கெட்டை அனுப்ப உகந்த சூழல் உள்ளது.
இதுகுறித்து சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் கையகப்படுத்தும் பணி 100% நிறைவு பெற்றுள்ளது. ஏவு தளம் அமையும் இடத்தை ஆய்வு செய்ததில் முழு திருப்தி அடைந்தேன்.
விரைவில் கட்டுமான பணி துவங்கும். சிறிய ரக செயற்கை கோள்கள் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுத்தளத்திலிருந்து ஏவப்படும்.
ராக்கெட் ஏவுதளத்திற்கு சரியான இடம் இது. நாங்கள் தயாராக உள்ளோம், பாதுகாப்பு மற்றும் கட்டுமான பணிக்கு அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளோம் என்றார் சோம்நாத்.









