இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீனியர்களுக்காக மீண்டும் திறந்த எகிப்திய எல்லை…

காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா கிராசிங்  பாலஸ்தீனியர்களுக்காக இன்று காலை 9 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.  காசா எல்லையில் ஒருபுறம் லட்சக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் குவிந்துள்ள நிலையில், பாலஸ்தீனியர்களை காஸாவை விட்டு வெளியேறுமாறு…

காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா கிராசிங்  பாலஸ்தீனியர்களுக்காக இன்று காலை 9 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. 

காசா எல்லையில் ஒருபுறம் லட்சக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் குவிந்துள்ள நிலையில், பாலஸ்தீனியர்களை காஸாவை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டுள்ளது.  இஸ்ரேல் தரப்பில் இருந்து தரைவழி தாக்குதலுக்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டதால், எந்த நேரத்திலும் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம். அதே சமயம் காஸாவை ஆக்கிரமிப்பது பெரிய தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, எகிப்தும் தனது எல்லையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.  இந்நிலையில், காசா, எகிப்து இடையேயான எல்லை  மீண்டும் திறக்கப்பட்டது.  காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா கிராசிங்  பாலஸ்தீனியர்களுக்காக இன்று காலை 9 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.  பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கி ஒரு வாரத்திற்குப் பிறகு,  காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட இழந்துள்ளனர்.  இதனால் காசாவின் 2.3 மில்லியன் குடிமக்கள் உணவு, தண்ணீர் மற்றும் பாதுகாப்புக்காக கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வடக்குப் பகுதியை காலி செய்ய இஸ்ரேலின் உத்தரவுக்கு கீழ்ப்படிய முயற்சி செய்கிறார்கள்.  மற்றவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் கூடினர்.  காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் எரிபொருள் மற்றும் அடிப்படை பொருட்கள் தீர்ந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என காசாவில் உள்ள மருத்துவர்கள் எச்சரித்துள்ளானர்.
மேலும் காசாவின் மருத்துவமனைகள் எரிபொருள் இல்லாமல் 24 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.  பேக்கப் ஜெனரேட்டர் வேலை செய்வதை நிறுத்தினால், ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மறுபுறம், செஞ்சிலுவை சங்கம் காசா பகுதியில் தண்ணீர் விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.  100க்கும் மேற்பட்டோர் கொண்ட நிவாரன குழு தற்போது காஸாவில் உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் பெரும் மோதலாக மாறாமல் தடுக்கும் நோக்கில் ஆறு அரபு நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த வாரம் மீண்டும் இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளார்.  கடந்த ஐந்து நாட்களில் அவரது இரண்டாவது வருகை இதுவாகும். எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபதா அல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிளின்கன் ஞாயிற்றுக்கிழமை கெய்ரோ வந்தடைந்தார். அரபுத் தலைவர்களுடனான பிளிங்கனின் கடைசி சந்திப்பு இதுவாகும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.