#IndianSuperLeague கால்பந்து தொடர் இன்று தொடக்கம்!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி, சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி.,…

#ISLFootBall | ISL Football series starts today!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.

11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி, சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., ஈஸ்ட் பெங்கால், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா எப்.சி., பஞ்சாப் எப்.சி. மற்றும் புதிய வரவான முகமைதன் ஸ்போர்ட்டிங் கிளப் என 13 அணிகள் பங்கேற்கின்றன.

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை சிட்டி – மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 7 ஆட்டத்தில் மும்பையும், ஒரு ஆட்டத்தில் மோகன் பகானும் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. சென்னையின் எப்.சி. தனது முதல் லீக்கில் நாளை ஒடிசா எப்.சி.யை புவனேஸ்வரில் சந்திக்கிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.