தனக்கு தெரிந்ததை பிசிறுதட்டாமல் திறம்பட செய்துவிட்டாலே போதும் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்பவர் தான் நம்முடைய இயக்குநர் அட்லீ.
அட்லீ விஜய்க்கு ஃபேன் பாய் என்பதை விட கிளாசிக் சினிமாவின் ஃபேன் பாய் என்பதே பொருத்தமாக இருக்கும். 7-ம் தேதி வெளியாகப்போகும் ஜவான் திரைப்படம் குறித்து சிந்தித்ததின் விளைவே இந்த கட்டுரை.மௌனராகம், சத்ரியன், அபூர்வசகோதரர்கள், சக்தே இந்தியா(ஷாருக் நடித்த இந்தி திரைப்படம்) இவைகளை தொடர்ந்து அட்லீ ஜவானுக்கு என்ன கதையை தேர்ந்தெடுத்து இருப்பார் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்க, ஜவான் திரைப்பட டிரைலர் பார்த்து அதுவா இருக்குமோ? இல்ல இதுவா இருக்குமோ என ஆரூடம் சொல்ல தொடங்கி விட்டனர். முதலில் விவாதத்திற்கு வந்த படம் வில்லு.. சக்தே இந்தியாவை அட்லீ தனது அண்ணன் விஜய்க்கு பிகிலாக விருந்து படைத்ததன் கைமாறாக அண்ணன் விஜய் நடித்த வில்லு படத்தை ஷாருக்கானுக்காக சமைத்திருப்பார் என உரையாடல்கள் ஒலித்தன. ஆனால் தந்தை விஜய் வில்லுவில் கொல்லப்பட்டு விடுவார். மகன் விஜய் ரவுடிகளை பழி வாங்குவார்.
ஆனால் ஜவான் டிரைலரில் 2 ஷாருக் இருப்பது பொருந்தினாலும் தந்தை ஷாருக்கான் உயிரோடு இருப்பது லேசாக பிசிறு தட்டியது. இதன் காரணமாக நன்றாக அலசி ஆராய்ந்ததில் அட்லீ ஷாருக்கானுக்காக ’பிக்’ செய்த கதை ஒரு கைதியின் டைரியாக இருக்கும் என கூறப்படுகிறது. பாக்கியராஜ் எழுதிய கதையை பாரதிராஜா கமலை வைத்து இயக்க அதிரிபுதிரி ஹிட் அடித்த படம் தான் ஒரு கைதியின் டைரி. தந்தை கமல் தனது குடும்பத்தை சிதைத்த வில்லனை பழிவாங்க, தனது மகனும் காவல்துறை அதிகாரியுமான இன்னொரு கமலையே எதிர்ப்பார். ஆயினும் பாசம் வெல்லும் படம் நிறைவடையும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அத்தோடு விட்டாரா பாக்யராஜ், கமலை வைத்து தனது குருநாதர் இயக்கிய அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து தானே இயக்கினார். இந்தியிலும் வசூலில் பட்டையை கிளப்பியது ஆஹ்ரி ராஸ்தா எனும் ஒரு கைதியின் டைரி.அதையே வழக்கம் போல ரெஸ்டொரேஷன் செய்துள்ளார் அட்லீ என்கின்றனர் சினிமா ரசிகர்கள். ஒரு கைதியின் டைரியில் அரசியல் பழிவாங்கல் என்பதற்கு பதில் ஜவானில் ராணுவ பழிவாங்கல். ஒரு பக்கம் வில்லன் இன்னொரு பக்கம் காவல் அதிகாரியான மகன்.. எது எப்படியோ, அட்லீ யின் கைபட்டால் அதற்கு தனி வரவேற்பு இருக்கும். திரைக்கதை ரசிகர்களை மகிழ்விக்கும்… அதே எதிர்பார்ப்பில் 7-ம் தேதி ரிலீஸாகும் ஜவானுக்காக காத்திருக்கும் அட்லீ ரசிகன்…