33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

நடிகர் கார்த்தியின் 26வது படத்தில் இணைந்துள்ள நடிகை இவர்தானா..?

நடிகர் கார்த்தி நடிக்கும் 26வது படத்தில் இணைந்துள்ள நடிகை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்ககப்பட்டுள்ளது‌. இதனை தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதையடுத்து இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது‌.

படத்தின் டப்பிங்கை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் படத்திற்கு பின்னர்  கார்த்தி தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்க உள்ளார்.  பெயரிடப்படாத இந்தப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் இதில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லனாக கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார். தம்பி, கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு நடிகர் சத்யராஜுடன் கார்த்தி இணைந்து நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading