தளபதி 68 டைட்டில் இதுவா?…வெளியான புதிய தகவல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு ‘பாஸ்’ என பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில்…

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு ‘பாஸ்’ என பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  ‘லியோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருவதால்,  ரசிகர்கள் மத்தியில் ‘தளபதி 68’ மீது  எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  ஏ. ஜி.எஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகும் ‘தளபதி 68’ ன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் பழைய தோற்றத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும், பகவதி, யூத் படத்தில் இருந்த விஜய் தோற்றம் இப்படத்தில் 10 நிமிட காட்சியாக இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு ‘பாஸ்’ என பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.