ஷோயப் அக்தரின் குற்றச்சாட்டு நியாயமானதா? நேற்று இரவு சார்ஜாவில் நடந்தது என்ன?

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்கள், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை கழற்றி பாகிஸ்தான் ரசிகர்கள் மீது வீசியும், ஒரு சிலரை அடித்தும், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய…

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்கள், மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை கழற்றி பாகிஸ்தான் ரசிகர்கள் மீது வீசியும், ஒரு சிலரை அடித்தும், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாய் ஷார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஏற்கனவே பாகிஸ்தான், இந்தியாவுடன் ஆடிய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை வலுப்படுத்தும் என்ற முனைப்பில் விளையாடிய நிலையில் ஆப்கானிஸ்தானுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. இதனை ஏற்றுக் கொள்ளாத ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்கள், போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை கழற்றி பாகிஸ்தான் ரசிகர்கள் மீது வீசியும், ஒரு சிலரை அடித்தும், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனிடையே பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கும் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.

https://twitter.com/shoaib100mph/status/1567589651598172161?t=zYCXhvrkAhhSv-HuMsaPlQ&s=19

 

இச்சம்பவம் நேற்று இரவு முதலே சார்ஜா வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தர், இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் முதன்மை செயல் அதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் யை டேக் செய்து,”இதைத்தான் ஆப்கன் ரசிகர்கள் செய்து வருகின்றனர். இதைத்தான் அவர்கள் கடந்த காலங்களில் பலமுறை செய்திருக்கிறார்கள். இது ஒரு விளையாட்டு மற்றும் இது சரியான மனநிலையில் விளையாடப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். நீங்கள் விளையாட்டில் வளர விரும்பினால், உங்கள் மக்கள் & உங்கள் வீரர்கள் இருவரும் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் பதிவு செய்திருந்தார். இதற்க்கு பதில் அளித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள்  முதன்மை செயலாளர் ஷபிக் ஸ்டானிக்சாய்,

“கூட்டத்தின் உணர்ச்சிகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது, கிரிக்கெட் உலகில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன, கபீர் கான், இன்சிமாம் பாய் மற்றும் ரஷித் லடிப் ஆகியோரிடம் நாங்கள் எப்படி நடந்துகொண்டோம் என்று கேட்க வேண்டும்” எனப் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இதுகுறித்த உண்மை அறியும் பொருட்டு, சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று நடந்த இச்சம்பவத்தால் சார்ஜா மைதானத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

https://twitter.com/ShafiqStanikzai/status/1567590990013427712?t=i0pZMZpzY1Ol-7OGNXjz5A&s=19

 

முன்னதாக போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் விக்கெட்டை, ஆப்கான் வீரர் பரீத் அஹமது வீழ்த்திய போது, ஆசிப் அலியின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, அதனை ஏற்றுக்கொள்ளத ஆசிப் அலி, ஆப்கான் வீரர் பரீத் அஹமதுவை கையால் தள்ளி வெறுப்பை வெளிப்படுத்திய சம்பவம் சர்சையானது. இதுகுறித்தும் பதிவிட்டிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷபிக் ஸ்டானிக்சாய்,

https://twitter.com/ShafiqStanikzai/status/1567580368173408257?t=ZS2kuX60M6jJjJIIwpLu2A&s=19

 

“இது ஆசிஃப் அலியின் தீவிர முட்டாள்தனம் மற்றும் மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவர் தடை செய்யப்பட வேண்டும், எந்த பந்து வீச்சாளரும் கொண்டாட உரிமை உண்டு ஆனால் உடல் ரீதியாக எதிர்ப்பு இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது”

என அவர் பதிவிட்டு இருந்தது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவேளை ஆசிப் அலியின் செயல்பாடுதான் ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று சார்ஜா வட்டாரத்தில் இருப்பவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எண்ணுகின்றனர்.


கிரிக்கெட் வரலாற்றில், கிரிக்கெட் வீரர்களின் எல்லை மீறிய கொண்டாட்டம் எதிரணியையோ அல்லது, எதிரணியின் ரசிகர்களையோ கடுப்படைய செய்வது தொடர்ந்து வந்தாலும், சமீப காலமாக அவை தாக்குதலுக்கு உள்ளக்கப்படுவது விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. அவை அனைத்தும் அரசியல் நோக்கங்களுக்காக உட்படுத்தப் படுகின்றனவா என்பதும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இதற்கு சமீபத்தில் வங்க தேச அணி வீரர்களின் (நாகினி ஆட்டம்) செயல்பாடு ஒரு உதாரணம் என்றால், எந்தவித மாற்றுகருத்தும் இல்லை!.

 

– நாகராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.