புஷ்பா 3 வருமா? – அல்லு அர்ஜுன் கொடுத்த மாஸ் அப்டேட்!

புஷ்பா படத்தின் 3-ம் பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம்…

புஷ்பா படத்தின் 3-ம் பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புஷ்பா முதல் பாகம் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது கலந்துகொண்டு பேசிய அல்லு அர்ஜுன் “புஷ்பா படத்தின் மூன்றாவது பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். அதற்கான சுவாரஸ்யமான யோசனைகள் எங்களிடம் உள்ளன. இப்போது உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் முதல் பாகத்தை விட வித்தியாசமானதாக இருக்கும். கதைக்களம் இப்போது ஆந்திராவில் இருந்து சர்வசதேச களத்துக்கு சென்றுள்ளது. முதல் பாகத்தில் நடித்த பன்வர் சிங் கதாபாத்திரம் புஷ்பாவுக்கு பெரும் சவாலாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.