நெல்லை விபத்து; மாணவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு

நெல்லையில் பள்ளி கட்டட விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்ட்டார் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் மாணவர்கள் கழிவறைக்கு…

நெல்லையில் பள்ளி கட்டட விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்ட்டார் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் மாணவர்கள் கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில், 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களான அன்பழகன் மற்றும் விஸ்வரஞ்சன் ஆகிய 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார்.

காயமடைந்த மாணவர்களுக்க திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட அளவில் குழு அமைத்து பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நெல்லையில் பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து துடித்துப் போனேன். அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்; உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்ச ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

https://twitter.com/mkstalin/status/1471786794869874693

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.