மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா அந்நோயில் இருந்து முழுமையாக குணமடையும் வரை நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரது திரைப்படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமந்தாவின் நடிப்பில் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் கடைசியாக வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் யசோதா பட புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தா, இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமந்தாவுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தன்பேரில், சமந்தா தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க நடிகை சமந்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் பேமலி மேன் 2 ஹிட்டுக்குப் பிறகு சமந்தாவுக்கு நிறைய வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது ஆனால் உடல்நலனில் அக்கறை காட்ட நீண்டநாள் ஓய்வு தேவைப்படுவதால் படக்குழுவினரை காத்திருக்கும்படி சமந்தா கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு ஏதும் வெளியாகவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பெல்லாம் சமந்தா விரைவில் முழுமையாக குணமடைந்து, விரைவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்பதே ஆகும்.