பெண்ணிடம் ஆபாசமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையாடுவதாக வெளியான ஆடியோ அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் களம் இறங்கி அந்நாட்டு பிரதமரானார். பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக உள்ள அவர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தீவிரபோராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இம்ரான்கானை சுற்றி பாகிஸ்தானில் பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இம்ரான்கான் பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவதாகவும் தமது வீட்டிற்கு வரக்கூறி அவருக்கு அழைப்புவிடுப்பதாகவும் ஆடியோ ஒன்று பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனலில் வெளியானது. அதனைச் சுட்டிக்காட்டி அரசியல் கட்சியினர் பலர் இம்ரான்கானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இம்ரான்கானின் நற்பெயரை கெடுப்பதற்காக போலியான ஆடியோ ஒன்றை அவரது அரசியல் எதிரிகள் வெளியிட்டுள்ளதாக தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.