லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி மாற்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கு விசாரிக்கப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐ,ஜி மாற்றப்பட்டுள்ளார் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 2016…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கு விசாரிக்கப்படும் ஊழல் தடுப்பு
மற்றும் கண்காணிப்பு பிரிவில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐ,ஜி
மாற்றப்பட்டுள்ளார்

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து
சிறப்பு புலனாய்வு பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள்
முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பான ஊழல் வழக்குகள்
பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  தொடர்பான வழக்குகளும் சிறப்புப் புலனாய்வு பிரிவில் பதிவு செய்யப்பட்டு  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்த சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐஜியாக இருந்த பவானீஸ்வரி, ஊழல்
தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக துரைகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்
கட்டாய காத்திருப்பில் இருக்கும் வந்திதா பாண்டேவை புதுக்கோட்டைமாவட்ட  எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ் பி ஆக இருந்த நிஷா பார்த்திபன் அயல் பணிக்காக மத்திய உளவு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்படத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.