முக்கியச் செய்திகள் விளையாட்டு

சுப்மன் கில் அசத்தல்; டெல்லியை எளிதாக வீழ்த்தியது குஜராத்

டெல்லியை எளிதாக வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. 

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட்டன. இதில் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதின. இதில், டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

வந்த வேகத்திலேயே மேத்யூ வேட் 1 ரன்னில் வெளியேற அவரையடுத்து வந்த விஜய் சங்கரும் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ சுப்மன் கில் மட்டும் தனி ஒருவனாக அணியின் டெல்லி அணியின் பந்து வீச்சை சிதறடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். அந்த அணி கேப்டன் தன் பங்கிற்கு 31ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 17வது ஓவரில் 84 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடக்க வீரர்கள் டிம் சீஃபர்ட் 3 ரன்னிலும் பிரித்வி ஷா 10 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

பின்னர் வந்த மந்தீப் சிங் 18 ரன்னில் அவுட்டாக அணி கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் நிதானமாக ஆடி வந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தது. ரிஷப் பண்ட்டும் 43 ரன்களில் அவுட்டாக ஆட்டம் மெதுவாக குஜராத் அணிக்கு சாதகமாக சென்றது. இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Advertisement:
SHARE

Related posts

கங்காரு பொம்மை வடிவ கேக்கை வெட்ட மறுத்த ரஹானே; ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Jayapriya

முனைவர் ஸ்ரீரோகிணி எழுதிய “அமீரகமே பாரதமே” பாடல் வெளியீடு

Halley Karthik

முதலமைச்சருக்கு பள்ளி மாணவி கடிதம்!

Jeba Arul Robinson