முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு எவ்வளவு?

ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வென்றது.

இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி இன்று மோதுகிறது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் கடந்த வருடம் போன்ற இந்த ஆண்டும் பரிசுத் தொகை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடியும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த மற்ற 2 அணிகளுக்கு தலா ரூ. 4.375 கோடி என கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

ஜெயக்குமார் பேட்டி முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

Gayathri Venkatesan

20 ரூபாய் டோக்கனை நம்பி ஏமாற வேண்டாம்: கோகுல இந்திரா

Niruban Chakkaaravarthi

காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Halley karthi