ஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐதராபாத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று இரவு 7.30க்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் – குஜராத் அணிகள் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் அணி அதன் பிறகு லக்னோ, டெல்லி, கொல்கத்தாவிடம் வரிசையாக தோல்வியை கண்டது. இதேபோல், தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்த குஜராத் அணி அடுத்த ஆட்டங்களில் மும்பை, பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஒருபக்கம் தோல்விகளில் இருந்து மீளும் முனைப்பில் ஹைதராபாத்தும் மறுமுனையில் வெற்றியை தக்கவைத்து புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் குஜராத் அணியும் களம் காணவுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.