ஐபிஎல் ஏலம் 2025 – புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரிஷப்பை ஏலம் எடுத்துள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின்…

ஐபிஎல் ஏலம் 2025 - புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரிஷப்பை ஏலம் எடுத்துள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 577 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நாளையும் இந்த ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்டை, 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், மிக அதிக தொகைக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து அவரின் சாதனையை முறியடிக்கும் விதமாக ரிஷப் பண்டை லக்னோ வாங்கி உள்ளது. ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லக்னோ அவரை எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.