முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணி இன்று மோதல்!

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷாப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான
ஐபிஎல் 2வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இளம் வீரர் ரிஷாப் பந்த் தலைமையிலான தற்போதைய டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மேலும் இந்த முறை ஒரு சிறந்த போட்டியைப் வெளிப்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசமான தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்திலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் காரணமாக லுங்கி என்ஜிடியும் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் ஜோஷ் ஹேசில்வுட் தன்னை போட்டிகளில் இருந்து விலக்கிக் கொண்டார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களான டு பிளெசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் தொடக்க பேட்டிங் சிஎஸ்கேவுக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் ஷார்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் போன்றவர்கள் தங்கள் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சிஎஸ்கே பந்து வீச்சில் வலுவானதாக இருக்கும்.

இதனையடுத்து, ஐ.பி.எல். கொரோனா கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் காகிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் டெல்லி அணியின் பந்து வீச்சில் சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் குர்ரன் ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவுள்ளனர்.

Advertisement:

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!

Nandhakumar

மனதில் நின்ற ஏமராஜா கதாபாத்திரம்!

Niruban Chakkaaravarthi

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Ezhilarasan