ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதி வருகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்த வரும் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் முக்கிய பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
குஜராத் அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம் சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணியில் ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்நு 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.







