ஐபிஎல் 2025 – டெல்லி அணியில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்!

டெல்லி அணியில் இருந்து நட்சத்திர வீரர் ஒருவர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிழவிய போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அண்மையில் மீண்டும் ஐபிஎல் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி மீதமுள்ள லீக் மற்றும் பிளே ஆஃப்  போட்டிகள் வருகிற ஜுன் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் டெல்லி அணி அணிக்கு மீதம் மூன்று லீக் சுற்றுகள் உள்ளன அதன்படி டெல்லி அணி  குஜராத், மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது. ஏற்கெனவே டெல்லி அணி  13 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதனால் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறும் கட்டாயத்தில் டெல்லி அணி உள்ளது.

இந்த நிலையில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அடுத்துள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணிக்காக ரூ.11.75 கொடுத்து வாங்கப்பட்ட ஸ்டார்க் நடப்பாண்டில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இவர் இல்லாதது டெல்லி அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால், பிரேசர் மெக்கர்குப் பதிலாக முஸ்தஃபிசூர் ரஹ்மான் மாற்று வீரராக செயல்படவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.