ஐபிஎல் தொடரின் இன்றை லீக் போட்டியில் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் தோற்ற கொல்கத்தா அணி அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் தோல்வியை தழுவியது. அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே வெற்றி முனைப்புடன் இன்றை போட்டியில் கொல்கத்தாவை சன்ரைஸ் அணி எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.
இன்றைய போட்டியானது கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.







