ஐபிஎல் 2023; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் குவிப்பு

ஐபில் 6வது லீக் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில்…

ஐபில் 6வது லீக் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 6-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், கான்வே களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ருதுராஜ் 31 பந்துகளில் 57 ரன்களும், கான்வே 47 ரன்களும் குவித்தனர்.தொடர்ந்து களமிறங்கிய துபே 27 ரன்களும், மொயீன் அலி 19 ரன்களும் எடுத்தனர். ஜடேஜா 3 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கேப்டன் தோனி மைதானத்திற்குள் நுழைந்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

கடைசி ஓவரின் தோனி ஸ்டைலில் வழக்கம் போல் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால், ரசிகர்கள் சத்தம் விண்ணை பிளந்தது. ஆனால் அடுத்த பந்தில் கேட்ச்சாகி தோனி அவுட்டானார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.