ஐபிஎல் 2023; சென்னை-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  16வது ஐபில் போட்டிகள் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று…

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

16வது ஐபில் போட்டிகள் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. முந்தைய 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சென்னை அணி அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் இருக்கிறது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றியும், 3 தோல்வியும் கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது.

சமபலம் வாய்ந்த இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னை அணியும், 12 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.