சபரிமலை ஐய்யப்பன் கோயில் சார்பில் ”அய்யன் செயலி” அறிமுகம்..!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்திகை மாதம் இன்று வெள்ளிக்கிழமை பிறந்துள்ள நிலையில், …

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்திகை மாதம் இன்று வெள்ளிக்கிழமை பிறந்துள்ள நிலையில்,  ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர்.  இதனை தொடர்ந்து,  மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் மகர விளக்கு பூஜைகள்
துவங்குகின்றன.  மேலும்,  41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று அடுத்த மாதத்தில் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடக்க உள்ளது.

இதையும் படியுங்கள்:வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் – இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்க உள்ளதால் சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பக்தர்களின் வசதிக்காக புதிய ஆன்லைன் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை காத்துக் கொள்ள இந்த செயலி உதவும்.

இந்த செயலி மூலம் வனப் பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், உடனடி மருத்துவ வசதிகள்,  குடிநீர் வசதிகள்,  தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும்,  பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக பெருவழிப் பாதைகளில் ஏராளமான
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார்
நியமிக்கப்பட்டு வனப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.