ட்விட்டரில் தமிழை முதன்மை மொழியாக அமைத்துள்ள 100% ஆண்ட்ராய்டு, iOS மற்றும் இணைய பயனர்களுக்கு தமிழ் தலைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ட்விட்டர் எப்போதும் மக்கள் தங்கள் ஆர்வங்களைப் பற்றியும், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் அறியவும், விவாதிக்கவும் ஏற்ற இடமாக இருந்து வருகிறது. மேலும், இன்று இலக்கியம், இசை, கவிதை, இன்னும் பற்பலத் தலைப்புகளில் தமிழில் மிகவும் பொருத்தமான மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களைக் கண்டறிவதை எளிதாக்கும் வகையில் தமிழ் தலைப்புகளை இந்தச் சேவை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், விஜய், ரஜினிகாந்த், A R ரஹ்மான் போன்ற கலைஞர்கள் அல்லது CSK போன்ற விளையாட்டுக் குழுக்களின் ட்வீட்கள் அதிகமாக இருந்தாலும், அவர்கள் முகப்புக்காலப் பதிவில் பார்க்க விரும்பும் உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும், தனிப்பயனாக்கவும் தமிழ் தலைப்புகள் மக்களை அனுமதிக்கும். பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுச் செய்திகள் உட்பட, ஆர்வம், பிரபலங்கள் அல்லது அவர்கள் பின்பற்றும் குழுவுடன் தொடர்புடைய அல்லது அதுபோன்ற உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதன் மூலம் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இது உதவும்.
ட்விட்டரின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்தியாவுக்காக உருவாக்கவும், நாட்டின் பல்வேறு பன்மொழி பார்வையாளர்களுக்கு சேவை செய்யவும், தமிழ் மொழியை முதன்மை மொழியாகக் கொண்ட 100% ஆண்ட்ராய்ட், iOS மற்றும் இணைய பயனர்களுக்கு தமிழ் தலைப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த வெளியீடு 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தி தலைப்புகள் மற்றும் கிரிக்கெட் டேப் பரிசோதனை மற்றும் Cricket Twitter – India Community போன்ற இந்தியாவுக்கு மட்டுமேயான அனுபவங்களைப் பின்பற்றுகிறது.
இதுகுறித்து, ட்விட்டர் இந்தியாவின் பங்குதாரர்களின் தலைவர் செரில்-ஆன் குடோ அவர்கள் கூறியதாவது: “பல ஆண்டுகளாக Spaces போன்ற அம்சங்களின் மூலம் நெருக்கமான மற்றும் உண்மையான தொடர்புகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நிகழ்நேர உரையாடல் மற்றும் இணைப்பின் நோக்கம் மற்றும் அளவை ட்விட்டர் விரிவுபடுத்தியுள்ளது. உண்மையில், தமிழ் பார்வையாளர்கள் ஸ்பேஸை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உற்சாகத்தைக் கொண்டாடும் வகையில் பிரத்யேக #TamilSpaces emoji ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம்.
தமிழில் தலைப்புகள் மற்றும் #OnlyOnTwitter செயல்பாடுகளுடன், இசை மேஸ்ட்ரோ இளையராஜா (@ilaiyaraaja) உடனான சமீபத்திய #FanTweets வீடியோ மற்றும் #15YearsOfSivaji விழாவில் ‘Voice Tweet from Rajnikanth’ போன்ற, பொருத்தமான மற்றும் பிரத்யேகமான உள்ளடக்கத்தை முறையே மக்களிடம் கொண்டு வருகிறோம். அவர்கள் அக்கறையுள்ள விஷயங்களுடனும், ஒருவருக்கொருவர் நேரடியாகவும் இணைவதற்கு அவர்களுக்கு உதவ முயற்சிக்கிறது. தமிழ் ட்விட்டரைச் சுற்றியுள்ள சமூகத்தை ஆதரிப்பதற்கும், உயர்த்துவதற்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் அது மேலும் வளர்வதைப் பார்க்கிறோம்” என்று கூறினார்.
-ம.பவித்ரா