நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய போதை இளைஞரால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே போதை தலைக்கேறிய நிலையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு அதில் படுத்து உறங்கிய வாலிபரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் வீடு…

மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே போதை தலைக்கேறிய நிலையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு அதில் படுத்து உறங்கிய வாலிபரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் வீடு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு உள்ள கச்சிராயபளையம் சாலையின் நடுரோட்டில் வாலிபர் ஒருவர் தனது பைக்கை நிறுத்தி விட்டு நடுரோட்டில் படுத்து சாவகாசமாக உறங்கிக் கொண்டிருந்தார். அவ்வழியாக செல்வோர் கண்டும் காணாமல் பார்த்துச் சென்ற நிலையில், அவ்வழியாக வந்த ஒருவர் பைக்கை நிறுத்திவிட்டு போதை ஆசாமியைப் பார்த்து அதட்டி எழுப்பினார்.

நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தை தள்ள முடியாமல் தள்ளாடிய வாலிபர் சாலையின் ஓரம் சென்று மறுபடியும் படுத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள் யார் என கேட்டபோது, போதையில் தனது அண்ணன் போலீஸ் என்றும், தனது பெயர் சிவா, தான் மெக்கானிக்கல் இன்ஜினியர் எனவும் உளறியுள்ளார். இன்ஜினியர் இப்படி செய்யலாமா என கேட்டதற்க்கு இன்ஜினியரிங் படித்தால் இதான் நிலைமை என பேசிக்கொண்டே இருந்துள்ளார்.

போதை இளைஞர் நடுரோட்டில் படுத்து உறங்கிய  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.