முக்கியச் செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்குகளை வெளியிடத் தயார்: அமைச்சர் மெய்யநாதன்

சென்னையில் முதல்முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வருகின்ற செப்டம்பர் 12 -ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

செப்டம்பர் 12 முதல் 18 ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகள் நடைப்பெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் டென்னிஸ் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

அப்போது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிற்றரசு உடன் இருந்தனர்.

விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி :-

தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை & எதிர்பார்ப்பாக உள்ள உலக மகளிர் டென்னிஸ் போட்டியை அரசு WTO உடன் இணைந்து நடத்த உள்ளது.

உலகத்தரத்தில் மைதானத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போல் மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளவும், தமிழ்நாட்டு டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் இந்த மைதானத்தில் பயிற்சியை செப்டம்பர் 8 முதல் தொடங்க உள்ளனர்.

கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. நிச்சயம் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணியில் பங்கேற்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 500 கோடி செலவு செய்திருப்பார்கள். ஆனால் திமுக அரசு மிகவும் குறைத்து 114 கோடியில் போட்டியை நடத்தி காட்டி உள்ளோம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் செலவு கணக்குகளை பொதுத்தளத்தில் வைக்கிறேன். யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

WTA 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2022 – செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 18 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யூடிஏ) தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் நேரடியாக நுழைவார்கள் என்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் டாப் 2 ஒற்றையர் வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா (169) மற்றும் கர்மன் தண்டி (494) நேரடியாக பிரதான போட்டிக்கான வைல்டு கார்டுகளைப் பெறுவார்கள்.

அதிக இந்திய சிறுவர், சிறுமியர் விளையாட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இளைஞர்கள் தங்கள் தரவரிசையை உயர்த்துவதற்கு நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம் என்று விஜய் அமிர்தராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக அரசு மிக பிரமாண்டமாக நடத்தி முடித்தது நினைவுகூரத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல- ஜி.கே.வாசன்

G SaravanaKumar

இந்தியாவை ஹிந்தியாக்கும் முயற்சியை ஒரு போதும் ஏற்கமாட்டோம்- சு.வெங்கடேசன்

G SaravanaKumar

மெட்ரோ இரயில் பணிகளில், தமிழ்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும்: எம்.பி கலாநிதி வீராசாமி

Arivazhagan Chinnasamy