இடைநிலை ஆசிரியர் பணி – கூடுதலாக 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை…

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய சூழலில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு என இரண்டு வகையான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

இந்நிலையில்,2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு கூடுதலாக ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 21 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.