இன்ஸ்டாகிராம் பிரபலம் கிலி பாலுக்கு கத்திகுத்து!

தன்சானியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கிலி பால், கத்தி மற்றும் தடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், `எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என அவர் கேட்டுக்கொண்டுள்ள பதிவு தற்போது வைரலாகியுள்ளது. தன்சானியாவைச்…

தன்சானியாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கிலி பால், கத்தி மற்றும் தடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், `எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என அவர் கேட்டுக்கொண்டுள்ள பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

தன்சானியாவைச் சேர்ந்த கிலி பால் மற்றும் நீமா பால் இருவரும், இன்ஸ்டாகிராமில் இந்தியப் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து மற்றும் தனித்தனியாக பதிவிடும் பதிவுகள் அனைத்தும் பலராலும், விரும்பி பார்க்காப்பட்டு வருகிறது. மேலும், இவர்கள் இருக்கும் பகுதியில் மின்சாரம் இல்லாதால், அவர்கள் 10 கி.மீ சென்று போனுக்கு சார்ஜ் செய்து வருவார்கள் என கூறப்படுகிறது.

பழங்குடி இளைஞரான கிலி பால் சமீபத்தில் தான் தாக்கப்பட்டதாக, அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது. மேலும், `எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என அவர் கேட்டுக்கொண்டது பலரையும் ஒருநொடி கண்கலங்க வைத்துள்ளது. கிலி பாலும், நீமா பாலும் உடன் பிறந்தவர்கள். இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியப் பாடலுக்கு நடனமாடியும், பாடலுக்கேற்ப உதடுகளை அசைத்தும் வீடியோ வெளியிட்டதே, இவர்கள், பல லட்சம் ஃபாலோவர்ஸ்களை பெற காரணம் என கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘‘இந்தியாவில் கிறிஸ்துவம் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது’ – திருமாவளவன்’

இந்நிலையில், தன்னை 5 பேர் தாக்கியதாகவும், அவர்கள் தாக்கியதில், தனது வலது கையின் கட்டை விரல் பாதிக்கப்பட்டுள்ளதகவும், அதனால், 5 தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிலி பால், தன்னை மற்றவர்கள் தாக்கும்போது தான் திருப்பி அடிக்க முயன்றதகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.