இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள தேவையற்ற பணியிடங்களை நீக்க, பணியிட எண்ணிக்கை ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களில், புதிதாக ஏற்படுத்தப்பட வேண்டிய பணியிடங்கள், மற்றும் ஏற்கனவே உள்ள தேவையற்ற பணியிடங்களை நீக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பணியிட எண்ணிக்கை ஆய்வுக்குழு அமைக்கபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 30 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.