INDvsZIM – ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்…

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி  20 ஓவர்களின் முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு  234 ரன்கள் எடுத்துள்ளது. அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.  அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களும், ரிங்கு சிங் 48 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே சார்பில் பிளெஸிங் முசரபானி, வெலிங்டன் பெட்ஸிசாய் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.