நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளன.
உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த சாதனையை தொடரும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. மேலும், அகமதாபாத் மைதானத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். தொடக்க ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான் அணியின் அப்துல்லா மற்றும் இமாம் உல்-ஹாக் களமிறங்கினர். பாகிஸ்தான் அணியின் அப்துல்லாவின் விக்கெட்டினை இந்திய அணியின் முகமது சிராஜ் எல்.பி.டபள்யூ முறையில் கைப்பற்றி அசத்தினார். எனவே 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்தது.
பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் 12வது ஓவரில் இழந்தார். பாகிஸ்தான் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிஸ்வான் தனது விக்கெட்டினை பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 49 ரன்கள் சேர்த்திருந்தார். அரைசதம் விளாசிய பாபர் அஸாம் தனது விக்கெட்டினை முகமது சிராஜ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
எனவே 30 ஓவர்கள் பேட்டிங் செய்து 3 விக்கெட்டினை இழந்து 156 ரன்கள் சேர்த்திருந்தது பாகிஸ்தான் அணி.தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவ்த் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். போட்டியின் 33வது ஓவரின் கடைசிப் பந்தில் ஃப்திகார் தனது விக்கெட்டினை குல்தீபிடம் இழந்து வெளியேறினார். எனவே 35 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டினை இழந்து 170 ரன்கள் சேர்த்திருந்தது. பாகிஸ்தானின் அதிரடி ஆல் ரவுண்டர் ஷதாப் கான் 2 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
தொடர்ந்து 155-3, 162-4, 166-5, 168-6, 171-7 என்ற கணக்கில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி சற்று தடுமாறியது. தொடர்ந்து 39வது ஓவர் முடிவில் நவாஸ் 14 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழ்ந்தார். இதனால் அப்போது 187 ரன்கள் எடுத்திருந்தனர் பாகிஸ்தான். பின்னர் 40வது ஓவர் முதல் பந்தை ஜடேஜா வீச பாகிஸ்தான் அணி தனது 9வது விக்கெட்டை இழந்தது.
இறுதியாக 42.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அஜாம் 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார்.







