இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்காக ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இங்கிலாந்து சென்றது. இந்தப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட்சைவர்-ப்ரண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரு அணிகளும் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 3 முறையும் இங்கிலாந்து ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது.
இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்ப்ரீத் கவுர் (c) , ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (w), தீப்தி சர்மா, சினே ராணா, சயாலி சத்கரே, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட்.
இங்கிலாந்து அணி: டாமி பியூமாண்ட், மாயா பூஷியர், ஹீதர் நைட், நாட் ஸ்கைவர்-பிரன்ட் (c), ஆலிஸ் கேப்ஸி, ஆமி ஜோன்ஸ் (w), மேடி வில்லியர்ஸ், சோஃபி எக்லெஸ்டோன், இஸ்ஸி வோங், லாரன் பெல், லாரன் ஃபைலர்.




