நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆஸ்திரேலியா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நியூசிலாந்து சென்றடைந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக இந்தோநேசியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை சந்தித்தார். மேலும் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனையடுத்து இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிசை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் யூரேனியம் ஏற்றுமதி உள்ளிட்ட 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தநிலையில் பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நியூசிலாந்து சென்றடைந்தார். தலைநகர் ஆக்லாந்து சென்ற பிரதமர் மோடியை அந் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று கட்டித் தழுவி வரவேற்றார். இந்த பயணத்தின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.