INDvsENG: இந்திய அணிக்கு 388 ரன்கள் இலக்கு!

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலை பெற்றது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மணி அடித்து துவக்கி வைத்தார்.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக பென் டக்கெட் மற்றும் பெத்தேல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 31 ஓவர் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணிக்கு பலமான அடித்தளம் அமைத்தனர். 93 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த பெத்தேல் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 192 ரன்களில் பார்ட்னர்ஷி முறிந்தது. இதனையடுத்து வந்த ஜோ ரூட் பெண்டக்கெட்டுடன் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில் பெண்டக்கெட் 109 பந்துகளில் சதம் விலாசினார். இந்த நிலையில் பெண்டக்கெட் பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 135 பந்துகளில் 18 ஃபொர் ஒரு சிக்ஸருடன் 141 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து வந்த ஹாரி ப்ரோட் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் ஜோ ரூட் 74 ரன்களும், ஜாஸ் பட்லர் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பிரசீத் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தநிலையில் இந்திய அணி 388 என்ற கடின இலக்கை துரத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.