தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,30,167 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,10,308 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனாவுக்கு 98 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13,826 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 15,114 மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,06,033
ஆக அதிகரித்துள்ளது.







