கர்நாடகாவில் மகளீர் குழு பெண்களை ஏற்றிக்கொண்டு சுற்றுலா சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 11 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் தர்வாட் மாவட்டத்தில் மகளிர் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் உள்ள 15 பெண்கள் விடுமுறைக்காக கோவாவிற்குன் இன்று காலை வேனில் சென்றுள்ளனர். அப்போது வேன் இடகட்டி கிராமத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் வேனில் பயணம் செய்த 11 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தர்வாட் காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலாவுக்கு சென்றபோது 11 பெண்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.