மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்டமுன் வரைவுகளின் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான கால வரம்பினை நிர்ணயம் செய்யும் வகையில் தனி நபர் மசோதாவினை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் தி.மு.க எம்.பி வில்சன்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்புரை 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான தனி நபர் மசோதாவினை பாராளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்து பேசிய அவர், அரசமைப்பு சட்ட உறுப்புரை 200-ல், மசோதாக்களின் மீது ஆளுநர்கள் முடிவெடுக்கவும், முடிவுகளை நிறுத்தி வைக்கவும், குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பவும் உரிய காலக்கெடுவை நிர்ணயம் செய்யும் வகையில் திருத்தம் செய்ய முன்மொழிவதாக தெரிவித்த அவர்,
இந்த சட்டம் அரசமைப்பு (திருத்த) சட்டம், 2022 என அழைக்கப்படலாம், எனவும் இந்தியக் குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்படும் நாளில் இருந்து, இந்த சட்டம உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்புரை 200-ல், Governor shall எனும் வார்த்தைகளுக்கு பின்பாகவும், “declare” எனும் வார்த்தைக்கு முன்பாகவும், within a period of two months எனும் சொற்றொடரை இணைக்க வேண்டும் என தெரிவித்தார். அதேபோல, “provided that the governor may” எனும் வார்த்தைகளுmpக்கு பின்னர், “as soon as possible” எனும் வார்த்தைகளுக்கு பதில் “within a period of month” என மாற்றப்பட வேண்டும் என தெரிவித்த அவர்,
அண்மைச் செய்தி: “சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.38,672க்கு விற்பனை “
முதல் விதியில், “provided that the governor may” எனும் வார்த்தைகளுக்கு பின்னர், “as soon as possible” எனும் வார்த்தைகளுக்கு பதில் “within a period of one month” என மாற்றப்பட வேண்டும் என அவர் அந்த தனி நபர் மசோதாவில் தெரிவித்தார்.
மேலும், இரண்டாம் விதியில், “form the date of receipt of the bill” எனும் வார்த்தைகளுக்கும் பிறகு, “within a period of one month from the date of receipt of the bill” என்பது இணைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு பேசிய அவர்,
அரசமைப்புச் சட்ட உறுப்புரை 200-ல் கால வரம்பு என்று ஏதும் குறிப்பிடப்படாத்தால், மசோதாக்களின் மீது முடிவெடுப்பதை தாமதப்படுத்த, அளவற்ற அதிகாரத்தை ஆளுநர்களுக்கு வழங்குவதாகவும், அந்த காலவரம்பை நிர்ணயிக்காமல் இருப்பது மக்கள் நலனுக்கு முட்டுக்கட்டையாகவும், எதேச்சையதிகாரத்தையும் அனுமதிப்பதாக தெரிவித்த அவர், மக்களின் விருப்பத்தை சமநிலைப்படுத்தும் வகையில், போதுமான காலக்கெடுவிற்குள் ஆளுநர்கள் முடிவெடிக்கும் வகையில் இந்த விதியானது திருத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







