பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்த ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பயணிகள் கப்பல்! சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி,  நாட்டிற்கு இன்று அர்ப்பணித்தார்.  தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,  பிரதமர்…

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி,  நாட்டிற்கு இன்று அர்ப்பணித்தார். 

தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதில் ஒன்று ஹைட்ரஜனால் இயங்கக் கூடிய பயணிகள் கப்பல்.  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  ஹைட்ரஜனால் இயங்கும் பயணிகள் கப்பல் விரைவில் காசியில் ஓடும் என்று அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ஹைட்ரஜனால் இயங்கும் அந்த கப்பலின் சிறப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம்…

  • இந்த கப்பல் இந்தியாவிலே ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் முதல் கப்பல் ஆகும்.
  • இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
  • இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமான கொச்சியில் இந்த கப்பல் கட்டப்பட்டது.
  • மத்திய அரசின் ஹரீத் நௌகா என அழைக்கப்படும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான பசுமை மாற்றம் வழிகாட்டுதலின்படி இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 17 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் நீர்வழிப் போக்குவரத்தில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முதல் முயற்சி இதுவாகும்.
  • இந்த கப்பலில் 50 பேர் வரை பயணிக்கலாம்.
  • ஹைட்ரஜன் கப்பலின் மொத்த திட்ட மதிப்பீட்டில்  75% பங்கை மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.
  • ஹைட்ரஜனால் இயங்கும் இந்த கப்பல் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும். மாசு அளவை குறைப்பதில் பெரும்பாங்காற்றும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.