இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில், இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் மோதி தோல்வி அடைந்தது.
மேலும் இதன் மூலம் இறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தானுடன் மோதியது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஆவேஷ் கானுக்குப் பதில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டார். இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடிது.
இந்திய அணி அதிரடியாக விளையாடியது. முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலி ஜோடி நிலைத்து நின்றதால், அணியின் ஸ்கோர் அதிகரித்தது. பின்னர் கே கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்ததாக இறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களுடன் வெளியேறினார். ஆனால் மறுபுறம் விராட் கோலி தனது அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தினார்.
இதனால் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை எட்டியது. விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களை விளாசியதோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப் பண்ட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஆறுதல் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், சிங்கிள் மேன் ஆர்மியாக விராட் கோலி 122 ரன்களை எடுத்து கொடுத்தார்.
இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கன் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களில் சுருண்டது.
அந்த அணியில் இப்ராஹிம் ஜட்ரான் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.
எஞ்சிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், அஸ்வின், தீபக் ஹூடா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இவ்வாறாக ஆப்கன் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்திய 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி அடைந்தது. கோலி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.







