உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கான ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 முக்கிய நகரங்களை அலங்கரிக்க உள்ளதை அடுத்து, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் பாடலை வெளியிட்டது ஐசிசி.
இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. உலகக் கோப்பை தொடருக்கு சுமார் 15 நாட்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
https://twitter.com/adidas/status/1704397482292072479
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கான ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பிரத்யேகப் பாடல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. “மூன்றாவது கோப்பை கனவை நிறைவேற்றும் முயற்சியை இந்தியா நிறுத்தாது என்ற நம்பிக்கை அளிக்கும் வரிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.







