அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் மசாஹிர் அலி என்பவர் வெஸ்லியான் பல்கலைகழகத்தில் படித்து வருகிறார்.
இவர் சிகாகோவில் தங்கியுள்ளார். சம்பவத்தன்று சையத் மசாஹிர் அலி வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சையத் மசாஹிர் அலியை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துரத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இரத்த காயங்களுடன் மாணவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








