முக்கியச் செய்திகள் இந்தியா

வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கு இனிப்பு வழங்கிய பாக்.ராணுவ வீரர்கள்!

பாகிஸ்தானின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அட்டாரி – வாகா எல்லையில் இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

நாடு முழுவதும் நாளை 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடபட இருக்கிறது. இதனால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலங்களின் முக்கிய அலுவலகங்கள், தலைநகரங்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75  ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் இந்த ஆண்டை ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் ஆண்டு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து நாட்டில் தேசிய கொடியின் விற்பனை அதிகரித்தது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியேற்றியுள்ளனர். இதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி பஞ்சாப்பில் உள்ள அட்டாரி – வாகா எல்லையில் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்  இந்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி இன்முகத்துடன் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

கல்லூரி மாணவனை உயிரிழப்புக்கு தூண்டிய பப்ஜி

Arivazhagan Chinnasamy

அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய சூழலியல் ஆர்வலரின் கதை!

Dhamotharan

ஓடிடி-யில் வெளியாகிறதா சாய் பல்லவி நடித்த படம்?

Halley Karthik