முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா மூன்றாவது அலை: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கொரோனாவின் மூன்றாவது அலை உடனடியாக தொடங்கும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸின் பரவலால், கொரோனாவின் இரண்டாவது அலை 2020 மார்ச் மாதம் தொடங்கி, தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக் குறை, தடுப்பூசி பற்றாக் குறை என்று பல்வேறு சவால்களை இந்தியா மருத்துவத்துறை சந்தித்தது.

தற்போது கொரோனாவின் பரவல் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் எல்லா மாநில அரசுகளும் தொடர்ந்து தளர்வுகள் அறிவித்து வருகிறது. கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்படும் என்று முன்பே அறிவுத்தப்பட்ட நிலையில் இந்திய மருத்துவ சங்கம் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:

’வழிப்பாட்டு தளங்கள், சுற்றுலாத் தளங்கள் திறக்கப்பட்டிருப்பாதால் கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் வேகமாக ஏற்பட வாய்புகள் உள்ளது. இதுவரை சர்வதேச அளவில் தொற்று குறித்து நமக்கு கிடைக்கும் சான்றுகளை வைத்து பார்த்தால், மூன்றாவது அலை இன்றியமையாததாகும். கூட்டமாக மக்கள் கூடும் சந்தர்ப்பங்கள்தான் கொரோனா 3 ஆம் அலையின் ஆரம்பப் புள்ளி’என்று எச்சரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியீடு!

Halley karthi

“கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம்

10 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு தயார்!

Niruban Chakkaaravarthi