இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் சிறைபிடிப்பு

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இந்திய-சீன படைகள் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும்…

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

இந்திய-சீன படைகள் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் கடந்த வாரம் மோதலில் ஈடுபட்டுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது. திபெத் வழியாக அருணாச் சலபிரதேசத்தின் தவாங் (Tawang) பகுதிக்குள் கடந்த வாரம் சீன வீரர்கள் நுழைய முயன்றனர். அவர்கள் அங்கு இருந்த சோதனைச்சாவடிகளை சேதப்படுத்த முயற்சித்துள் ளனர்.

அப்போது, அங்கு வந்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்தனர். இதனால், இருநாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சீன வீரர்கள், தங்கள் நாட்டு எல்லைக்குத் திரும்பியுள்ளனர். இந்த மோதலில் சீன வீரர்கள் சிலரை இந்திய படையினர் சிறைபிடித்தனர்.

இதனை தொடர்ந்து இருநாட்டு படையினரின் உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த் தைக்கு பின்னர் சீன வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த ஊடுருவல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.