‘இந்தியன் 2’ படத்தின் டிரெய்லர் ஜூன் 25ம் தேதி வெளியாகிறது – படக்குழு அறிவிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் (ஜுன் 25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றி…

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் (ஜுன் 25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது.  அதன் பின்னர், இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பலம்’ பாடல் வெளியானது.  இதனைத் தொடர்ந்து  ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.  முன்னதாக ‘இந்தியன் – 2’  திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானது.

பாரா, நீலோற்பலம், காலண்டர், கதறல்ஸ், கம் பேக் இந்தியன், சகசக ஆகிய ஆறு பாடல்கள்  வெளியிடப்பட்டன.  இந்த ஆறு பாடல்களும் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில், குறிப்பாக,  ‘கதறல்ஸ்’ என்ற பாடல் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.  இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் (ஜுன் 25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.