முக்கியச் செய்திகள் சினிமா

கமலின் புதிய கெட்டப்பில் தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு

கமல்ஹாசன் மீசையுடன் இருக்கும் சில புகைப் படங்களைப் வைத்து பார்க்கும் போது பிளாஷ் பேக் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்சினை எனப் பல காரணங்களால் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாயின. பின் ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் தற்போது சுமூகமாக முடிந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.சென்னை வடபழனி பிரசாத் லேபில் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

பின் சிறு இடைவேளைக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் இன்று துவங்குகிறது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணைவதோடு அவருடன் காஜல் அகர்வால் பங்கேற்கிறார். கமல்ஹாசன் மீசையுடன் இருக்கும் சில புகைப் படங்களைப் பார்க்கும் போது பிளாஷ் பேக் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பை விரைந்து முடித்து இன்னும் 10 நாட்களுக்குள் தனது மற்றொரு படமான ராம் சரண் நடிக்கும் RC15 படத்தில் இணையவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவரான பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், பேட்டி ஒன்றில் பேசுகையில் இந்தியன் 2 படம் மொத்தம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் இருப்பதாகக் கூறினார். மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேகதாது: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கும் அனைத்துக் கட்சி குழு

EZHILARASAN D

வணக்கம், எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Arivazhagan Chinnasamy

கேரள நடிகையின் பெயரை லைவில் கூறிய நடிகர் மீது வழக்கு

எல்.ரேணுகாதேவி